பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-11-10 19:25 GMT
பணகுடி:
பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பிளஸ்-2 மாணவி

பணகுடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 44). கூலி தொழிலாளி. இவருடைய மகள் சுகுனா (17). பிளஸ்-2 படித்து வந்தார். வீட்டில் ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுகுனா வீட்டின் கூரையில் உள்ள மின்விசிறி கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மூதாட்டி

கல்லிடைக்குறிச்சி கீழ்முகம் நாடார் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மனைவி பத்ரகாளி (70). இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவரை இழந்து தனியாக வசித்து வந்த பத்ரகாளிக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த அவரை குடும்பத்தினர் யாரும் கவனிக்காததால் மனமுடைந்த பத்ரகாளி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாக தெரிகிறது.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீ்ட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பத்ரகாளி இறந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்