அரிமளம் அருகே கறி குழம்பு சாப்பிட்ட பெண் திடீர் சாவு
அரிமளம் அருகே கறி குழம்பு சாப்பிட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
அரிமளம்:
பெண் சாவு
அரிமளம் ஒன்றியம், கடையக்குடி ஊராட்சி வளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சுவாதி (வயது 27). இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவாதி சாதத்தில் கறி குழம்பு ஊற்றி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டு உள்ளது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுவாதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.