கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

Update: 2021-11-10 17:42 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப் பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

பள்ளி மாணவி 

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் புரவிபாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாரதி கண்ணன் (21) என்பவருக்கும், அந்த மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதை தொடர்ந்து திடீரென்று அந்த மாணவி மாயமானார். அவரை பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

கடத்தி சென்று திருமணம் 

இது குறித்து பொள்ளாச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

அதில் பாரதி கண்ணன் அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று அம்பராம்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்தது தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் பாரதி கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்