தினதந்தி புகார் பெட்டி

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2021-11-10 17:06 GMT
சேறும், சகதியுமான சாலை
மயிலாடுதுறை மாவட்டம் கங்கணம்புத்தூர் ஊராட்சி ஜீவாநகர் அல்காதர் தெரு உள்ளது. இந்த தெருவின் வழியாக மஜீத் காலனி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.  இந்த நிலையில் இந்த தெருவில் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க  உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-கங்கணம்புத்தூர் ஊராட்சி மக்கள், மயிலாடுதுறை.
அடிப்படை வசதி செய்து தர வேண்டும்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டை தெற்கு காடு கிராமம் உள்ளது.  இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்த கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலை மற்றும் வடிகால்  வசதியில்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகள் வீடுகளுக்கு படையெடுக்கின்றன. இதனால் குழந்தைகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளை சுற்றி மழை தண்ணீர் தேங்காமல் இருக்கவும், அடிப்படை வசதி செய்து தரவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி.
வடிகால் வசதி வேண்டும்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் ஆண்டிபந்தல் அருகே ஆதிலட்சுமி நகர் உள்ளது. இந்த நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வடிகால் வசதியில்லை. இதனால் தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி காணப்படுகிறது. தண்ணீர் தேங்கியுள்ளதால் விஷப்பூச்சிகள் வீடுகளுக்கு படையெடுக்கின்றன. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி தருவதோடு வடிகால் வசதியும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், ஆதிலட்சுமி நகர், நன்னிலம்.

மேலும் செய்திகள்