சாக்கடையில் விழுந்த பசுமாடு
சாக்கடையில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
அந்தியூர் அருகே குப்பாண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னண்ணன் (வயது 40). இவர் வளர்த்து வந்த பசுமாடு வீட்டின் அருகே இருந்த சாக்கடையில் நேற்று மாலை தவறி விழுந்துவிட்டது. இதுபற்றி சின்னண்ணன் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ்க்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாக்கடையில் விழுந்த பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.