கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பதுக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்

கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பதுக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-11-10 15:09 GMT
தூத்துக்குடி:
கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பதுக்கிய தந்தை, மகனை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி பதுக்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன், சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பாண்டவர் மங்கலத்தில் உள்ள காட்டுபகுதியில் சோதனையிட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ரேஷன் அரசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தந்தை-மகன் கைது
இதனையடுத்து போலீசார் அங்கு  21 மூட்டைகளில் இருந்த ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மேல பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த பூல்சாமி மற்றும் அவரது மகன் பாண்டிதுரை (வயது 27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்