தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்
அரிமளம்
அரிமளம் அருகே உள்ள புதுநிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 55). தென்னை மரத்தில் ஏறி இளநீர் மற்றும் தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று ஒருவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் மீது ஏறி இளநீர் பறித்தபோது தவறி கீழே விழுந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.