தொடர் மழையால் 16 ஏரிகள் நிரம்பின

தொடர் மழையால் 16 ஏரிகள் நிரம்பியுள்ளன.

Update: 2021-11-09 19:41 GMT
பெரம்பலூர்:

நீர்வரத்து அதிகரிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் 73 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மேற்கு எல்லையான பச்சைமலையில் பலத்த மழை பெய்து வருவதால் காட்டாறுகளிலும், ஏரிகள், குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பச்சைமலையில் இருந்து உற்பத்தியாகிவரும் கல்லாற்றில் மழைநீர் அதிகரித்து வருவதால் பாண்டகப்பாடியில் உள்ள தடுப்பணையில் நீர்வழிந்து வெள்ளாற்றுக்கு செல்கிறது. மாவட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரி, சிறிய ஏரி, வெண்பாவூர், நூத்தாப்பூர், பாண்டகப்பாடி, அரசலூர் ஏரி, பெரம்பலூர் தாலுகாவில் உள்ள மேலப்புலியூர் அய்யலூர், குன்னம் தாலுகாவில் உள்ள கீழப்பெரம்பலூர், வடக்கலூர், வடக்கலூர் அக்ரகாரம், ஒகளூர், கீரனூர், பெருமத்தூர், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள வரகுபாடி ஆகிய 16 ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. நெற்குணம், பேரையூர், வயலூர், கிழுமத்தூர், அகரம்சிகூர், கைப்பெரம்பலூர், குரும்பலூர், லாடபுரம் ஆகிய 9 ஏரிகளில் 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன. பெரம்பலூர் சிறிய ஏரி (வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி), துறைமங்கலம் பெரியஏரி, வி.களத்தூரில் உள்ள சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குரும்பலூர் ஏரி ஆகிய 54 ஏரிகளிலும் 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன.
உபரிநீர் வெளியேற்றம்
கைகளத்தூர், எழுமூர், ஆய்குடி, தழுதாழை, வெங்கலம், அன்னமங்கலம் ஆகிய 6 ஏரிகளும் 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை நிரம்பி உள்ளன. பெரம்பலூர் பெரிய ஏரி, சின்னாறு நீர்த்தேக்க பெரிய ஏரி உள்பட 15 ஏரிகளில் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் நீர் நிரம்பி உள்ளன. அரணாரை நீலியம்மன் ஏரி, எசனை உள்பட 23 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாக நீர் நிரம்பி உள்ளது. விசுவக்குடி அணையின் முழு கொள்ளளவான 26.74 அடியில், தற்போது 25.78 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. உபரிநீர் பிரதான மதகுவழியாக திறந்து விடப்படுகிறது. இதனை நேற்று பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குனருமான அனில் மேஷ்ராம், மாவட்ட கலெக்டருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருதையாற்றின் குறுக்கே கொட்டரையில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தின் உயரம் 33.78 அடி ஆகும். இதில் முழு கொள்ளளவான ஏறத்தாழ 212.47 மில்லியன் கனஅடி நீர் தேங்கி உள்ளதால், பிரதான மதகுகள் வழியாக உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
மழை அளவு
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு;- 
பாடாலூர்-3, அகரம் சிகூர்-14 லெப்பைக்குடிகாடு-13, பெரம்பலூர்-8, எறையூர்-9, கிருஷ்ணாபுரம்-10, தழுதாழை-9, வி.களத்தூர்-10, வேப்பந்தட்டை-9, மொத்த மழை அளவு-92 மி.மீ.

மேலும் செய்திகள்