ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் பிடிபட்டார்
சுரண்டை அருகே ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் பிடிபட்டார்.
நெல்லை:
நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி கருப்பசாமி மகன் சவுந்தரராஜன் (வயது 19) என்பவர் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடையம் பகுதியில் ரேஷன் அரிசியை சேகரித்து கடத்தி வந்து கோழி தீவணத்துக்கு தயார் படுத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரராஜனை கைது செய்தனர்.