ஏரி நிரம்பியதால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது
ஏரி நிரம்பியதால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பல ஏரிகள் நிரம்பி கோடி போகிறது.
இந்தநிலையில் வேலூர் அருகே உள்ள அம்முண்டி சின்னஏரியும் சில நாட்களுக்கு முன்பு நிரம்பியது. இதனால் அதன் அருகில் வசிக்கும் குடியிருப்புகள் தண்ணீர் புகுந்தது. தண்ணீர் வடியாததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். சிலர் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.