ஓடும் ரெயில் மீது நாயை தூக்கி வீசி கொன்ற வாலிபர் கைது

ஓடும் ரெயில் மீது நாயை தூக்கி வீசி கொன்ற வாலிபர் கைது

Update: 2021-11-09 18:26 GMT
வேலூர்

வேலூரை அடுத்த காட்பாடி கல்புதூரை சேர்ந்தவர் புனித்ராமசாமி  விலங்கின பாதுகாவலராகவும், வேலூர் மாவட்ட மிருகவதை தடுப்பு சங்க மேலாண்மை கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார்.
இவர், தெருவாழ் உயிரினங்களான நாய்கள், பூனைகளுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று வேலூர் காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் நாய்களுக்கு பிஸ்கெட்டுகளை வழங்கினார். 
அப்போது அங்கிருந்த மர்மநபர் ஒருவர் திடீரென ஒரு நாயை பிடித்து தூக்கி அந்த வழியாக சென்ற ரெயில் மீது வீசினார். இதில், ரெயிலில் அடிபட்டு நாய் சம்பவ இடத்திலேயே செத்தது. 

இதுகுறித்து புனித்ராமசாமி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம், அம்மாபாளையம் மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்த குமார் (23) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்