பாலாறு அணைக்கட்டில் கலெக்டர் ஆய்வு
பாலாறு அணைக்கட்டில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
வாலாஜா
பாலாறு அணைக்கட்டில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வாலாஜாவை அடுத்த பாலாறு அணைக்கட்டில் தடுப்பணையை தாண்டி பாலாற்றில் தண்ணீர் செல்வதை இன்று மாலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் ஆனந்தன், உதவி பொறியாளர் சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.