கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கன மழையால் 182 ஏரிகள் நிரம்பின

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கன மழையால் 182 ஏரிகள் நிரம்பின

Update: 2021-11-09 16:46 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 335 ஏரிகள், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு சொந்தமாக 305 ஏரிகள் என மொத்தம் 640 ஏரிகள் உள்ளன. மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்த மழையினால் பிரதான அணைகளான கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் நிரம்பி உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. 

இந்த தண்ணீர் கோமுகி மற்றும் மணி, முக்தா ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் வழியாக ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு செல்கின்றன. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் படிப்படியாக நிரம்பி வருகின்றன. அதன்படி நேற்று வரை மாவட்டத்தில் 182 ஏரிகளில் 100 சதவீதம் தண்ணீர் நிரம்பியது. மேலும் 101 ஏரிகள் 76 முதல் 90 சதவீதமும், 109 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும், 148 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 100 ஏரிகள் 5 முதல் 25 சதவீதம் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்