கம்பம் சுருளி வேலப்பர் கோவிலில் சூரசம்ஹாரம்
கம்பம் சுருளி வேலப்பர் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.
கம்பம்:
கம்பத்தில் உள்ள சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இல்லாமல் நடந்தது. அப்போது கோவில் வெளிப்பகுதியில் நின்றிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கினர். பின்னர் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் கம்பராயபெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சண்முகநாதர் கோவில், ஆதிசக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் ஆகியவற்றிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.