குப்பைகளை அகற்றிய துப்புரவு பணியாளர்கள்
குப்பைகளை அகற்றிய துப்புரவு பணியாளர்கள்
தாராபுரம்,
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட எல்.ஜி.எஸ். நகருக்கு செல்லும் வழியில் குப்பைகள் குவிந்து கிடந்தது குறித்து நேற்று ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இதனை அறிந்த தாராபுரம் நகராட்சி நிர்வாகம் எல்.ஜி.எஸ் நகருக்கு செல்லும் வழியில் குவிந்திருந்த குப்பைகளை 5-க்கும் மேற்பட்ட துப்புறவு பணியாளர்கள் லாரியில் அள்ளிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரமான சூழ்நிலை நிலவி வருகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுவது தடுக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், குப்பைகளை அள்ளிய தாராபரம் நகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.