இடைவிடாமல் தொடர் கனமழை: காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிரம்பிவரும் ஏரி, குளங்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது.

Update: 2021-11-09 06:07 GMT
காஞ்சீபுரம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து, கடந்த ஒருவாரமாக தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்தநிலையில் ஏரிகள் நிறைந்த ஒருக்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொடர் கன மழை காரணமாக பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது.

சென்னை மழை நீரில் தத்தளித்து வரும் சூழ்நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்தது. காஞ்சீபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், சாலவாக்கம், ஸ்ரீபெருமந்தூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:

காஞ்சீபுரம்-23.60 மி.மீ, ஸ்ரீபெரும்புதூர் -71.60 மி.மீ, உத்திரமேரூர்- 41 மி.மீ,

வாலாஜாபாத்- 17.20 மி.மீ, செம்பரம்பாக்கம்- 46.40 மி.மீ, குன்றத்தூர்- 66.70 மி.மீ. மொத்தம்-266.50 மி.மீ., சராசரியாக 44.41 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்