மாணவிக்கு தொந்தரவு; 3 வாலிபர்கள் போக்சோவில் கைது

மாணவிக்கு தொந்தரவு கொடுத்த 3 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-08 21:02 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார்(21), சந்துரு (வயது 21), அஜித்(21). இவர்கள் 3 பேரும் ஒரு மாணவியை செல்போனில் படம் எடுத்து, அந்த மாணவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். இதையறிந்த மாணவியின் பெற்றோர், அவர்களை எச்சரித்தபோது அவர்களையும் தாக்க முற்பட்டுள்ளனர். இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்