தூக்குப்போட்டு பெண் தற்கொலை
இளையான்குடி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள கரும்புக்கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருைடய மனைவி சாந்தி (வயது 47). இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.