மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபாக இறந்தார்.

Update: 2021-11-08 16:29 GMT
கரூர்
தோகைமலை
கடவூர் தாலுகா வெள்ளபட்டியை சேர்ந்தவர் பெத்தான் (வயது 70). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து முதியோர் உதவி தொகையை பெறுவதற்காக தனது மகன் முனியப்பனுடன் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து சென்று கொண்டிருந்தார். குளித்தலை-மைலம்பட்டி மெயின் ரோட்டில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து பெத்தான் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக  மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பெத்தான் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்