கோவில்பட்டி அருகே கோவில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்

கோவில்பட்டி அருகே கோவில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்

Update: 2021-11-08 16:03 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள மந்தித்தோப்பு கிராமம் ராஜகோபால் நகரில் செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள கருப்பசாமி, பைரவர் உள்பட 5 கல்சிலைகளை யாரோ மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி யுள்ளனர்.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா வேல்முருகன் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்