சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இடத்தை கையகப்படுத்த எதிர்ப்பு

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இடத்தை கையகப்படுத்த எதிர்ப்பு

Update: 2021-11-08 15:58 GMT
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்னாள், இன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் நிர்வாகிகள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இடத்தில் 5 ஏக்கரை விளையாட்டுத்துறைக்காக ஒதுக்கி உள் விளையாட்டு அரங்கம் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டு இடத்தை அபகரித்து விட்டனர். இந்த உள் விளையாட்டு அரங்கில் கல்லூரி மாணவர்கள் விளையாட எந்த ஒரு அனுமதியும் இல்லை. தற்போது மீண்டும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியின் 12.5 ஏக்கர் நிலத்தை விளையாட்டுத்துறையினர் கையகப்படுத்த முயற்சித்தனர். கடந்த 2 வருடமாக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
அதன்பிறகு விளையாட்டுத்துறைக்கான கட்டுமான பணி தொடங்கியபோது அனைவரும் சேர்ந்து தடுத்து நிறுத்திவிட்டோம். எனவே கல்லூரி இடத்தை விளையாட்டுத்துறை அபகரிப்பதில் இருந்து மீட்டு கல்லூரி பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்