நாமக்கல் மாவட்டம் முழுவதும் இடைவிடாது பெய்த சாரல் மழை பள்ளிகளுக்கு விடுமுறை
நாமக்கல் மாவட்டம் முழுவதும் இடைவிடாது பெய்த சாரல் மழை பள்ளிகளுக்கு விடுமுறை
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக மங்களபுரம் பகுதியில் 16 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
மங்களபுரம்-16, சேந்தமங்கலம்-11, ராசிபுரம்-7, நாமக்கல்-6, கொல்லிமலை-5, புதுச்சத்திரம்-2, கலெக்டர் அலுவலகம்-1. மாவட்டத்தின் மொத்தமழை அளவு 48 மி.மீட்டர் ஆகும்.
நாமக்கல் நகரை பொறுத்தவரையில் நேற்று காலை முதலே இடைவிடாது சாரல் மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாரல்மழை நீடித்தது. எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் விடுமுறை அறிவித்தார். இருப்பினும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின.
====