மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
நெல்லை:
பாளையங்கோட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் அந்தோணி (வயது 25). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில், மோட்டார் சைக்கிளை திருடி சென்றது மகிழ்ச்சி நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (28), பாளையங்கோட்டை திருவாய்மொழி தெருவை சேர்ந்த ஆனந்த் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே 2 பேரையும் கைது செய்தார்.