விவசாய நிலத்தில் செத்துக்கிடந்த மான்
விவசாய நிலத்தில் மான் செத்துக்கிடந்தது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் கணபதி என்பவருடைய விவசாய நிலத்தில் நேற்று மான் ஒன்று செத்துக்கிடந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து இறந்த மான் ஒரு வயதுடைய ஆண் மான் என்றும், நாய்கள் துரத்தி கடித்ததில் அந்த மான் இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து, அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று அந்த மானை புதைத்தனர்.