திருக்கோவிலூர் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை பணம் திருட்டு

திருக்கோவிலூர் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2021-11-07 17:41 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சேவகன் மகன் உத்தரகுமார்(வயது 26). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கண்டாச்சிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். 

இந்த நிலையில் உத்தரகுமாரின் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து அவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் விரைந்து சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவை உைடத்து உள்ளே புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1,000 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்