மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

நத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து ஓட்டல் தொழிலாளி ஒருவர் பலியாகினார்.

Update: 2021-11-07 17:01 GMT
நத்தம்: 

நத்தம் அருகே உள்ள நல்லூர் குரும்பபட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 28). இவர் நத்தம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் அவர் ஓட்டலுக்கு வேலைக்கு வந்தார். 

அப்போது ஓட்டலில் உள்ள ‘சுவிட்ச் பாக்ஸ்’ ஒன்றில் மின்வயரை இணைக்க குமார் முயன்றதாக கூறப்படுகிறது. இதில், எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்