திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர்
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர்
அரக்கோணம்
வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள, தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு் படையினர் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஒரு குழுவும், மதுரை மாவட்டத்திற்கு 2 குழுக்களும் அனுப்பப்பட்டனர்.
அரக்கோணம் நகரிகுப்பத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒரு குழுவிற்கு 15 முதல் 20 வீரர்கள் விதமாக, மொத்தம் 4 குழுக்கள் அதிநவீன மீட்பு கருவிகளுடன் மீட்புப்படை வாகனத்தில் நேற்று காலை புறப்பட்டு சென்றனர்.