ராசிபுரம் அருகே, அரிசி ஆலையில் பொருட்களை அடித்து சேதப்படுத்திய 2 வாலிபர்கள் கைது
ராசிபுரம் அருகே, அரிசி ஆலையில் பொருட்களை அடித்து சேதப்படுத்திய 2 வாலிபர்கள் கைது
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே பட்டணம் பரமேஸ்வரன் நகர் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருபவர் செந்தில். இவர் தீபாவளி அன்று ஆலையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் அன்று மாலை அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் ஆலைக்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலி, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து அரிசி ஆலையில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதாக பரமேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்த கவிமணி (வயது 20) மற்றும் இளவரசன் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.