பழுதடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்

பழுதடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்

Update: 2021-11-07 15:02 GMT
கணபதி

கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால்ரத்தினபுரி, சங்கனூர் முதல் நல்லாம்பாளையம் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 

மேலும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த சாலை குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி உள்ளது.

இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் அவதிப் பட்டு வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். 

எனவே அந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக உள்ள நல்லாம்பாளையம் சாலை யில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்