நாற்றங்கால் அமைக்கும் பணி

தாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்று நீரை கொண்டு நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் நெல்நாற்றங்கால் அமைக்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.

Update: 2021-11-07 12:08 GMT
தாராபுரம்
தாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்று நீரை கொண்டு நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் நெல்நாற்றங்கால் அமைக்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.
அமராவதி ஆறு
உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இந்த அணையில் பெறப்படும் தண்ணீரை கொண்டு திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டத்தை சோ்ந்த லட்சக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக  மழை பெய்து வருகிறது. 
இதனால் அணையின் நீா்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால்  அணையிலிருந்து  அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சாிக்கை விடப்பட்டுள்ளது. 
நாற்றங்கால்
அதுபோன்று அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்களிலும் தண்ணீா் திறந்து விடப்பட்டது. அதன் மூலம் அமராவதி அணை பாசனத்திற்கு உட்பட்ட கடைமடை விவசாயிகளுக்கும் தண்ணீா் கிடைக்கப்பெற்றது. இதனால் தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளான அலங்கியம், கோவிந்தாபுரம், சத்திரம், சின்னக்காம்பாளையம், கொளத்துப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிளை சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தற்போது அவா்கள் தங்கள் வயல்களில் நெல் சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனா். அதற்காக அவா்கள் தங்கள் நிலங்களில் நெல் நாற்றாங்கால் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனா். அதில் நாற்றுகள் 2 வாரங்களில் வளா்ந்து வந்துவிடும். பின்னா் அந்த நெல் நாற்றுகளை விவசாயிகள் தங்கள் வயல்களில் நடுவார்கள். 


மேலும் செய்திகள்