கொலையாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை

திருத்தணி அருகே வாலிபர் மர்மச்சாவு வழக்கில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2021-11-07 11:08 GMT
மர்மச்சாவு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள காவேரி ராஜபுரம் காலனியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் கிராமத்திற்கு அருகில் உள்ள ஏரியில் பிணமாக மிதந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் இளங்கோவன் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

முடிவில் குற்றவாளிகளை கண்டிப்பாக கைது செய்வோம் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்