பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் தேவகி அணிந்து இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்பொண்டு தப்பிச்சென்றனர்.

Update: 2021-11-07 10:25 GMT
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த வி.ஜி.கே புரத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி தேவகி (வயது 52). நேற்று முன்தினம் தனது மொபெட்டில் வேலையின் காரணமாக கனகம்மாசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் காஞ்சிப்பாடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் தேவகி அணிந்து இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்பொண்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து அவர் கனகம்மா சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்