தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை ெசய்தது ஏன்? கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

Update: 2021-11-06 22:49 GMT
ராதாபுரம்:
தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொழிலாளி கொலை
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே கால்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிகுமார் (வயது 45). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவில் ராதாபுரம் அருகே மருதப்பபுரத்தில் இருந்து கால்கரை செல்லும் வழியில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சீனிகுமாரை அவருடைய அண்ணனின் மைத்துனரான வள்ளியூர் கீழ தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுடலையாண்டி (50) கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான சுடலையாண்டி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-
மதுபோதையில் தகராறு
சீனிக்குமார் அடிக்கடி என்னிடம் மது வாங்கி தருமாறு கூறி மிரட்டி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று பெத்தரங்கபுரத்தில் உள்ள சீனிகுமாரின் மகளை பார்ப்பதற்காக நானும், சீனிகுமாரும், வள்ளியூரைச் சேர்ந்த முருகேசன் (45) என்பவரது ஆட்டோவில் புறப்பட்டு சென்றோம்.அப்போது மதுபோதையில் இருந்த எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் சீனிகுமாரை கத்தியால் குத்திக்கொலை செய்தேன்.
இவ்வாறு சுடலையாண்டி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முருகேசனையும் போலீசார் கைது செய்தனர்.
................

மேலும் செய்திகள்