கூலித்தொழிலாளி மர்ம சாவு
ஒரத்தநாடு அருகே கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மர்ம சாவு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு அதே பகுதியில் அவரது உறவினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறினை சமாதானம் செய்து விலக்கிவிட்டார்.
அதன் பிறகு வீட்டிற்கு சென்ற மணி தனது மனைவி லதாவிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார். இந்தநிலையில் நேற்று காலை அவருக்கு நெஞ்சு வலி அதிகமாக இருந்ததால் அவரை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். பிறகு வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட மணி சிறிது நேரத்திலேயே மர்மமான முறையில் இறந்தார்.
போலீசில் புகார்
இதுகுறித்து மணியின் மனைவி லதா (48) ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதில், சம்பவத்தன்று இரவு தனது கணவரின் உறவினர் ஒருவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறினை சமாதானம் செய்து விலக்கி விட்டதாகவும், அதன்பிறகு தன்னிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், பிறகு நேற்று காலை நெஞ்சு வலி அதிகமாக இருக்கிறது என்று கூறியதால் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் திடீரென மர்மமான முறையில் அவர் இறந்துவிட்டார்.
எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.