ஓடும் லாரியில் பதுங்கிய பாம்பால் பரபரப்பு

ஓடும் லாரியில் பதுங்கிய பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-06 20:50 GMT
சுரண்டை:
தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் இருந்து நெல் விதைகளை ஏற்றிய லாரி நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தது. சுரண்டை பஸ் நிலையம் அருகில் சென்றபோது, டிரைவரின் இருக்கைக்கு முன்புறம் கண்ணாடியின் அருகில் கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து சென்றது.
இதனைப்பார்த்து அதிர்ச்சி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். இதுகுறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, லாரியில் பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்து சென்று, வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்