சதுரகிரி கோவில் மலைப்பகுதியில் இரும்பு பாலம் அமைக்க நடவடிக்கை

பக்தர்கள் செல்ல வசதியாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல இரும்பு பாைத அமைக்க வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-11-06 20:42 GMT
வத்திராயிருப்பு, 
பக்தர்கள் செல்ல வசதியாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல இரும்பு பாைத அமைக்க வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 
அனுமதி மறுப்பு 
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுேம செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை,  சங்கிலி பாறை ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடை, வெள்ளப்பாறை ஓடை, சுந்தரமகாலிங்கம் கோவில் சன்னதிக்கு எதிரே உள்ள ஓடை, கோவிலுக்கு செல்லும் ஓடை உள்பட 7 ஓடைகள் உள்ளன.
மழை காலங்களில் இந்த ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. 
இரும்பு பாலம் 
இந்த 7 ஓடைகளில் பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வர இரும்பு பாலங்கள் அமைக்கவும், வழுக்குப்பாறை கோணத்தளவாசல்மேடு, சங்கிலிப்பாறைமேடு, ரெட்ட லிங்கம் மேடு, நாவல் ஊற்று மேடு ஆகிய பகுதிகளில் இரும்பு கைப்பிடிகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.  இந்தநிைலயில் இதற்காக ஏற்கனவே இந்து சமய அறநிலைய சார்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வனத்துறை அனுமதிக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இரும்பு பாலம் மற்றும் இரும்பு கைப்பிடி அமைக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.6.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் ஓடைகள் மற்றும் பாறை பகுதிகளை கடந்து செல்வதற்கு இரும்பு பாலம், இரும்பு கைப்பிடி அமைக்க சாப்டூர் வனச்சரக அலுவலர் செல்லமணி, வனவர்கள் சின்னக்கருப்பன், ஜெய் சங்கர் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்கொண்டனார்.
 அப்போது சுந்தரமகாலிங்கம்சாமி கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்கிற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்