பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

பாலம் அமைக்க அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.

Update: 2021-11-06 20:36 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி தாலுகா, கம்பிக்குடி ஊராட்சி, மந்திரிஓடை கிராமத்தில், நரிக்குறவர் காலனியில் நேற்று சிறு பாலம் அமைப்பதற்கும், சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்கும் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி  தலைமையில், அமைச்சர் தங்கம் தென்னரசு நிர்வாக அனுமதி ஆணைகளை வழங்கி, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு  ரூ.35 லட்சம் மதிப்பில் மந்திரி ஓடை சத்திரம், புளியங்குளம் சிறு பாலம் அமைப்பதற்கும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.5.75 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணிகளுக்கான நிர்வாக ஆணைகளையும், ரூ.3.84 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதிகள் செய்வதற்கான நிர்வாக ஆணைகளையும் கம்பிக்குடி ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்