டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம், மதுபாட்டில்கள் திருட்டு

சிவகாசியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம், மதுபாட்டில்களை திருடி சென்றனர்.

Update: 2021-11-06 19:52 GMT
சிவகாசி, 
சிவகாசி சிவானந்தம் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு கடை ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் வந்து டாஸ்மாக் கடையை திறக்க முயன்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஊழியர்கள் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பண பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.41 ஆயிரம், 7 மது பாட்டில்களும் ஒரு யு.பி.எஸ். கருவியும் காணாமல் போனது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த ஊழியர்கள் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்