கரூரில் ரூ.6¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி கரூரில் ரூ.6¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

Update: 2021-11-06 17:13 GMT
கரூர், 
தீபாவளி கொண்டாட்டம்
கரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பொழுதுபோக்கிற்காக பலர் திரையரங்களுக்கு சென்று படம் பார்த்தனர். இதனால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. இரவில் மத்தாப்பூ, பட்டாசு வெடித்ததில் நகரப்பகுதி ஜொலித்தது. மேலும் புகைமூட்டம் பரவி இருந்தது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை மதுப்பிரியர்கள் மது அருந்தி உற்சாகமாக கொண்டாடினர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கடந்த 3-ந் தேதியும், 4-ந் தேதியும் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. டாஸ்மாக் பார்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
ரூ.6¾ கோடிக்கு மது விற்பனை
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 94 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட மதுபான வகைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றன.
மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த 3-ந் தேதி ரூ.3¼ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. கடந்த 4-ந் தேதி ரூ.3½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் மொத்தம் ரூ.6¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்