நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 470 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 470 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 470 காசுகளாக உயர்ந்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.97-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.