ராமநாதபுரம் மாவட்டத்தில் நண்டு விலை கிலோ ரூ.1000
பருவநிலை மாற்றத்தினால் வரத்து குறைவாக உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நண்டு விலை கிலோ ரூ.1000-ஐ தொட்டது. இதனால் அசைவ பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம்,
பருவநிலை மாற்றத்தினால் வரத்து குறைவாக உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நண்டு விலை கிலோ ரூ.1000-ஐ தொட்டது. இதனால் அசைவ பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அதிக தேவை
ரம்ஜான் பண்டிகை சமயத்தில் மீன்கள், கறி, நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகளின் விலை அதிக தேவை காரணமாக உயர்வது வழக்கம். இதேபோல புரட்டாசி மாதம் முடிந்ததும் ஐப்பசி மாதம் தொடங்கியதும் அதிக தேவை காரணமாக மீண்டும் அசைவ உணவுகளின் விலை உயரும். இந்த சமயங்களில்தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்கள், கறி, கோழி, நண்டுகள் விலை கடுமையாக உயர்த்தி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இந்த விலை உயர்வு சில மாதங்களுக்கு நீடிப்பதுடன் தேவை குறைந்ததும் விலை குறையும். ஆனால் ராமநாதபுரம் மாவட் டத்தில் தற்போது மீன்கள் உள்ளிட்ட கடல் உணவுகளின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. குறிபப்பாக நண்டு விலை இதுவரை இல்லாத அளவிற்கு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ. 500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.1000 தொட்டுள்ளது. அதிலும் விலை உயர்வு காரணமாக மீன்கடைகளில் நண்டுகளையே காண முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
திடீர் விலை உயர்வு
விலை அதிகம் உயர்ந்துள்ளதால் யாரும் வாங்க முன்வராத தால் மீன்வியாபாரிகள் நண்டுகளை வாங்கி விற்பதை தவிர்த்து வருகின்றனர். இந்த திடீர் விலை உயர்விற்கு பருவநிலை மாற்றம் காரணமாக கடல்பகுதியில் வரத்து குறைவாக உள்ளதாகவும் இதன்காரணமாகவே நண்டு விலை உயர்ந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருபுறம் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந் துள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் சிலர் கொரோனாவிற்கு சளியை கரைப்பதில் நண்டு முக்கியத்துவம் பிடித்துள்ளதால் 3-வது அலை பரவி உள்ள நாடுகளில் நண்டுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுஉள்ளதாகவும் இதனால் நண்டுகள் அனைத்தும் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுவதால் உள்ளூரில் நண்டுகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ருசி குறைவு
இதன்காரணமாகவே நண்டுகளின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக விலை காரணமாக தற்போது ஆந்திராவில் இருந்து சில வியாபாரிகள் நண்டுகளை வரவழைத்து விற்பனை செய்து வருவதாக கூறப் படுகிறது. இந்த நண்டுகள் பிடித்து சில நாட்களானதாக உள்ளதாலும் அதன் ருசி குறைவாக உள்ளதாலும் அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை என்று வியாபாரிகள் தெரிவிக் கின்றனர். நண்டுகளின் விலை உயர்ந்துள்ளதால் அதனை விரும்பி உண்ணும் அசைவ பிரியர்கள் கவலை அடைந்து உள்ளனர்.