ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமு தலைமை யிலான போலீசார் அரண்மனை பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது பள்ளி மைதானம் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டு இருந்தவரை பிடித்து விசாரிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன் றார். உடனடியாக அவரை மடக்கி பிடித்து சோதனை யிட்ட போது முதுகின் பகுதியில் கூர்வாள் ஒன்றை மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கைப்பற்றினர். இவரிடம் நடத்திய விசார ணையில் ராமநாதபுரம் இந்திராநகர் குருவிக்காரத் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சாந்தமூர்த்தி (வயது23) என்பவர் என்பதும் தனது எதிரிகளை பழிவாங்கும் நோக்கில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த கூர்மையான வாளை பறிமுதல் செய்த போலீசார் சாந்தமூர்த்தியை கைதுசெய்தனர். இவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.