சிறுமியை சில்மிஷம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது

சிறுமியை சில்மிஷம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது

Update: 2021-11-06 14:38 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 11 வயது சிறுமி. இந்த சிறுமி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆனைமலையை சேர்ந்த தொழிலாளி கிரிநாத் (21) என்பவர் சிறுமியை சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியின் தந்தை ஆத்திரத்தில் கிரிநாத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கிரிநாத் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் தந்தை மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை சில்மிஷம் செய்ததாக கிரிநாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்