தாம்பரத்தில் த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து தாம்பரத்தில் த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் தபால் நிலையம் அருகில் திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல்சமது, த.மு.மு.க. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாஹிர் உசேன், காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் சலீம்கான், இளைஞரணி மாநில பொருளாளர் ஆஷிக் ஹமீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தேவஅருள் பிரகாசம், தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.