களக்காடு:
வள்ளியூரை சேர்ந்தவர் முத்துஜோதி (வயது 40). இவர் தனது உறவினர்கள் சிலருடன் ஒரு காரில் சேரன்மாதேவிக்கு சென்று கொண்டிருந்தார். களக்காடு அருகே உள்ள பிளவக்கல் இசக்கியம்மன் கோவில் சாலையில் சென்ற போது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்து முத்துஜோதி, அவரது மகள் விஜயராகவி (4) உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைகாக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி விஜயராகவி பரிதாபமாக உயிரிழந்தாள். மற்ற 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.