தீபாவளிக்கு ரூ.16 கோடியே 86 லட்சத்துக்கு மது விற்பனை

தீபாவளிக்கு ரூ.16 கோடியே 86 லட்சத்துக்கு மது விற்பனையானது

Update: 2021-11-05 20:34 GMT
திருச்சி
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானங்களை அதிகளவு விற்பதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் அதிகாரிகள் செய்திருந்தனர். மேலும் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் மதுப்பாட்டில்கள் விற்பனைக்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது அதன்படி தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி பண்டிகையன்றும் அதிகளவு மது விற்பனை ஆனது.அதன்படி, இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளியன்றும் டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மதுவிற்பனை ஆகி உள்ளது. திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 3-ந் தேதி ரூ.45.29 கோடியும், 4-ந் தேதி ரூ.49.57 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் தீபாவளி பண்டிகையையொட்டி 3-ந் தேதி ரூ.8.40 கோடிக்கும், 4-ந் தேதி தீபாவளியன்று ரூ.8.46 கோடிக்கும் என 2 நாட்களில் ரூ.16 கோடியே 86 லட்சத்துக்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்