ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்டாற்று வெள்ளம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால் சோதனை சாவடியை தண்ணீர் சூழ்ந்தது.

Update: 2021-11-05 19:44 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால் சோதனை சாவடியை தண்ணீர் சூழ்ந்தது. 
தொடர்மழை 
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
இதனால் நீர்நிலைகள், கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
சோதனை சாவடி 
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று வந்த காட்டாற்று வெள்ளம் செண்பகத்தோப்பு - மம்சாபுரம் சாலையிலுள்ள வனத்துறையின் சோதனை சாவடியை சூழ்ந்தது.
 ஏற்கனவே இடியும் நிலையில் உள்ள இந்த இந்த சாவடி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இதனால் நேற்று சோதனை சாவடியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக வெளியேறி சென்றனர். நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

மேலும் செய்திகள்