ெபண் தீக்குளித்து தற்கொலை
வாணாபாடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ராணிப்பேட்டை
வாணாபாடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 21). இவருடைய கணவர் சரத்குமார். இவர்களுக்கு கார்த்தி (2½) என்ற ஆண் குழந்தை உள்ளது. பிரியாவிற்கு திருமணம் ஆகி சுமார் 4½ ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா தனது தாய் வீடான வாணாபாடி கிராமத்தில் வசித்து வந்தார்.
குழந்தை கணவர் வீட்டில் வளர்ந்து வருகிறது. குழந்தையை பார்க்க பிரியா, எடப்பாளையம் பகுதியில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது பிரியாவை சரத்குமார் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பிரியா வாணாபாடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார்.
உடனடியாக அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி சுமார் 4½ ஆண்டுகளே ஆனதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.