பட்டாசு வெடித்த 246 பேர் கைது

பட்டாசு வெடித்த 246 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-05 16:59 GMT
ராமநாதபுரம், 
தென்மண்டல ஐ.ஜி. அன்பு உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் கடந்த 30- ந் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜை அன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட ஆயிரத்து 544 நபர்கள் மீது இதுவரை 190 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் காணொலி காட்சி பதிவு மூலம் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்களை் கண்டறிந்து, தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தீபாவளி அன்று உச்ச நீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 233 வழக்குகள் போடப்பட்டு, 246 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மது போதையில் வாகனங்கள் ஓட்டிய நபர்கள் மீது 809 வழக்குகள் போடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது.

மேலும் செய்திகள்