அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் உடல்நசுங்கி பலி
ராமநாதபுரம் அருகே தீபாவளி அன்று அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் உடல்நசுங்கி பலியாகினர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே தீபாவளி அன்று அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் உடல்நசுங்கி பலியாகினர்.
ஸ்டூடியோ
ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடியை சேர்ந்தவர் கணேசன் மகன் பிரகாஷ் (வயது38). ராமநாதபுரம் செல்லப்பெருமாள் கோவில் தெரு பகுதியில் பட்டறை வைத்து நடத்தி வந்தார். ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் ராஜேஷ் கண்ணன் (35). போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார்.
நண்பர்களான இவர்கள் 2 பேரும் தீபாவளி அன்று மாலை சொந்தவேலையாக மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் அருகே உள்ள காரிக்கூட்டம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள வேலையை முடித்து கொண்டு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கிளம்பி நெடுஞ்சாலையில் ஏறி திரும்பியபோது அந்த வழியாக ராமேசுவரத்தில் இருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளாகினர்.
கைது
இந்த விபத்தில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக பலியாகினர். இவர்கள் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் பற்றி பிரகாசின் மனைவி அனிதா அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் தேனி சின்னமனூரை சேர்ந்த காதர் மகன் முகம்மது இர்சாத் (48) என்பவரை கைது செய்தனர்.
தீபாவளி அன்று வாலிபர்கள் இருவரும் பலியானதை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.